கடந்த வருடம்(2012) டிசம்பர் சாதாரண தரப் பரீட்சை எழுதி சித்தியடைந்த மாணவர்களை உயர்தர வகுப்பில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு அண்மையில் சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் (வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்) இடம்பெற்றது.
நேற்றைய தினம் (02.05.2013) முதன் முதலாக மாணவர்களை அழைத்து ஆரம்ப ஒன்று கூடலை நடாத்தியதுடன், மாணவர்களது ஒழுக்க விடயங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில் முன்னாள் பாடசாலையின் அதிபரும், தற்போது கல்குடா வலயக் கல்வி வலயத்தில் பணியாற்றும் வி.பஞ்சலிங்கம் அவர்களும், பாடசாலையின் அதிபர் க.சுந்தரலிங்கம் மற்றும் பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்னாள் அதிபரினால் பாடசாலையின் விஞ்ஞான பிரிவின் தொடர்ச்சியை ஊக்குவிக்குமுகமாக தகுதியுடைய மாணவாகளுக்கு விஞ்ஞானப் பிரிவில் கற்கவேண்டியதன் அவசியமும் எடுத்துக்கூறப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் (03.05.2013) இரண்டாவது நாளாக இடம்பெற்ற புதிய உயர்தர மாணவர்களது ஒன்றுகூடலில் மாணவர்கள் தெரிவுசெய்யவேண்டிய பாடங்கள் தொடர்பான அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் விருப்பத்திற்கும், அவர்களுடைய பெறுபேற்றிற்கமைவான தகுதியினடிப்படையிலும் பாடங்களை மாணவாகள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மாணவர்களின் பிரேத்தியேக வகுப்புகள் தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டதையும் அறியமுடிகின்றது. சுமார் 70 வரையிலான மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வகளில் கலந்துகொண்டனர்.
