13 May 2013

புயல்காற்றினால் மாவடிவேம்பில் மின்சாரம் துண்டிப்பு

SHARE
வங்கக்கடலில் உருவாகிநகர்ந்து செல்லும் மகாசென் தாழமுக்க புயலின் தாக்கத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் மழை இன்று அதிகாலை தொடக்கம் இடம்பெற்றிருந்தது. மாவடிவேம்பில் வீசிய கடும் காற்றினால் மாவடிவேம்பு காளிகோவில் இரண்டாம் குறுக்குத் தெருவில் மின்கம்பத்தில் மரம் விழுந்து மின்சாரம் தடைப்பட்டிருந்தது.


இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார சபையினர் மின் இணைப்புக்ககளை துரிதமாக சீராக்கியதுடன், பிற்பகல் 3.00 மணியளவில் மீண்டும் மின்சாரம் சீராகக் கிடைத்தது.








SHARE

Author: verified_user