14 May 2013

மாணவர்களின் பெற்றோருக்கான ஒன்றுகூடல்

SHARE
புதிய உயர்தர மாணவர்களின் பெற்றோருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று சித்தாண்டி,  வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (14.05.2013) காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.  பாடசாலையின் அதிபர் கி.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், புதிய உயர்தர மாணவாகள் கலந்துகொண்டனர்.


புதிய உயர்தர மாணவாகளின் வகுப்பு ஒழுங்கு தொடர்பாக வலியுறுத்தப்பட்டதுடன் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகவும் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.  இதேவேளை நாளைய தினம் புதிய உயர்தர மாணவர்களை பிரிவுகளாக பிரிக்கும் நடவடிக்கை இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இவ்வாறு புதிதாக உள்ளீர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு  ஆரம்பத்திலேயே பாடங்கள் நடைபெறாத நிலை தோற்றுவிக்கப்படாமல் பாடநேரங்களை ஒழுங்குபடுத்தி கொடுத்து தொடர்ச்சியாக ஆரம்பத்திலிருந்தே ஒழுங்கான முறையில் பாடங்கள் நடைபெற வேண்டும்.
SHARE

Author: verified_user