ஆலய வரலாற்றுச் சுருக்கம்:-
எழில் கொஞ்சும் இயற்கை வளமும், ஏருளுது பயிரிடும் விளைநிலமும் சேர்ந்து ஒன்றாய் இருக்க சேனைப்பயிர், செழிப்பான கனிமரங்கள், காலமறிந்து பால்தரும் கறவையினங்கள் , காற்றில் கானமிசைக்கும் பறவையினங்கள், பகையறியா வேளாளப் பெருமக்கள் இவற்றையெல்லாம் தாய்மடியாய்த் தாங்கும் எங்கள் தங்கமண் குடும்பிமலையாகும். இங்கே 1955 - 1960 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்மீக நாட்டமுடைய பெரியோர்கள், போடிமார், உழவர்கள் முதலியோரால் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக மலையடிவாரத்தில் அம்மனையும், மலையேறுவோர் வழிபட மலையுச்சியில் வேலையும் வைத்தனர். அன்றிலிருந்து கண்ணகி அம்மன் ஆலயம் வைகாசி முதல் திங்கள் வருடாந்த உற்சவம் கண்டு வருகின்றது.
(துண்டுபிரசுரம் - பிருந்தன்)
