20 May 2013

புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டிய சித்திரப் போட்டி

SHARE
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சித்திரப் போட்டி ஒன்றினை நடத்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால்  திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டியில், புகைத்தலால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை சித்தரித்துக் காட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த உயர் தரம் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி போட்டியின் நிபந்தனைகளாவன,
"புகைத்தலால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்"  எனும் தலைப்பில் சித்திரம் வரையப்படல் வேன்டும்.
1. இச் சித்திரப்  போட்டிகளில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.
2. சித்திரங்கள் பிறிஸ்டல் போட்டில்  வரையப்பட்டு அதன் பின் பக்கத்தில் சித்திரம் வரைந்த மாணவரின் பெயர், கல்வி கற்கும் ஆண்டு என்பன தெளிவாக எழுதி அதன் கீழ் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு  அதிபரின் பதவி முத்திரை பொறிக்கப்படல் வேன்டும்.
3. சித்திரங்களை  எதிர்வரும் 27ம் திகதிக்கு முன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக உரிய பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க வேன்டும்.
இவ் ஓவியப் போட்டிகளில் 1 தொடக்கம் 10 வரையான நிலைகளைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், 1ம்,2ம்,3ம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிக்னப்பட்டுள்ளது.
இப் போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவை தொடர்பு கொள்ளமுடியும்.
SHARE

Author: verified_user