பிரான்ஸில் பெய்து வரும் அடைமழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஐந்தடி உயரத்திற்கு வெள்ள நீர் ஓடுகிறது.
பிரான்ஸில் பழமையான கட்டிடங்களின் உள்ளே வெள்ள நீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணகான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக 70 வயது பெண் ஒருவர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பிரான்ஸில் மிகவும் புகழ்பெற்ற sanctuary of Lourdes என்ற சுற்றுலாப்பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தெரிகிறது.
பல நூற்றாண்டுகளாக வழிபட்டுவரும் Catholic Sanctuary, என்ற தேவாலயத்தினுள் தண்ணீர் புகுந்துள்ளது.
வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணியில் பிரான்ஸ் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

