03 June 2013

சித்தாண்டியில் மின்னல்தாக்கி மரம் சேதம்

SHARE
கடந்த வெள்ளிக்கிழமை (31.05.2013) அன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காணப்பட்டது. இவ்வேளையில் பிற்பகல் 2.30 மணியளவில்  சித்தாண்டியில் உள்ள மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. 

சித்தாண்டி 04 ஆம் குறிச்சி, தீர்த்தக்கேணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீட்டின் தென்னைமரத்தினையே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கத்தினால் மரத்தின் உச்சி பற்றி எரிந்துள்ளதனை காணக்கூடியதாகவும் இருந்தது.
இதேவை கடந்த 2011 இன் இறுதியில் சித்தாண்டி சந்தணமடு ஆறு பகுதிக்கு அருகிலுள்ள பனை மரம் ஒன்றினைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user