.JPG)
டெங்கு நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் அண்மைக்காலமாக இலங்கையின் பல பிரதேசங்களிலும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் (06.07.2013) மாவடிவேம்பு 02 பிரதேசத்தில் சிரமதான நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதன்போது காளிகோவில் வீதியில் அமைந்துள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வில் மாவடிவேம்பு 02 இற்குரிய கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் , மாவடிவேம்பு 02 இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சி.திருப்பதி மற்றும் மாவடிவேம்பு 02 பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
(பிருந்தன்)