20 August 2013

சித்தாண்டி முருகனின் தீர்த்தோற்சவம்

SHARE
சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு இன்று (20.08.2013) சிறப்பாக நடைபெற்றது. கடந்த 05.08.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவானது இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது. 

சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திலிருந்து சுவாமி வீதியுலா வரப்பட்டு சித்தாண்டி, உதயன்மூலையில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில்  தீர்த்தமாடுவதற்க வந்து சேர்ந்தது.
ஆனந்தக்காவடிகள் , நேர்த்திக்கான பொங்கல் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் பெருமளவிலான மக்களின் வருகையுடன் தீர்த்த நிகழ்வுகள் இடம்பெற்றது. இதேவேளை தன்னீர்ப்பந்தல், அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது.
(ஒளிப்படம்:- மாறன், சித்தார்த்தன்)




















SHARE

Author: verified_user