செங்கலடி இரட்டைக் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (05.09.2013) வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
செங்கலடியில், வர்த்தகர் சிவகுரு ரகு, அவரின் மனைவியான சுந்தரமூர்த்தி விப்ரா ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட அவர்களின் மகளான ஆர். தலக் ஷனா, எஸ்.அஜந், பு.சுமன் மற்றும் கு.நிலக்ஷன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் நேற்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

