24 May 2014

உகந்தைமலை முருகன் ஆலய புனரமைப்பிற்கான உதவிகோரல்

SHARE
எமது தேசத்து ஆலயங்களில் ஒன்றான உகந்தைமலை முருகன் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 04.07.2014 அன்று கும்பாபிஷேக நிகழ்வை நடாத்துவதற்கு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்புனரமைப்பு பணிகளில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த யாத்திரிகர் சங்கங்களும் பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புனரமைப்பு, கும்பாபிஷேக நிகழ்வு என்பவற்றுக்கெல்லாம் அதிகளவு நிதி தேவைப்படுவதால் பிரதேசங்கள் தோறும் நிதி சேகரிப்பு பணிகளும் இடம்பெற்று வருகின்றன. 

எமது தேசத்து பக்தகோடிப் பெருமக்கள் உகந்தைமலை முருகப்பெருமானின் ஆலய வளர்ச்சிப் பணிக்கு பங்களிப்பு செய்ய விரும்பின் கீழ் உள்ள ஆலய வண்ணக்கரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிற்கொள்கின்றனர் ஆலய வண்ணக்கரும் திருப்பணி சபையினரும். 
Surendraraj (வண்ணக்கர் ) Mobile No:- 0776076949 , மக்கள் வங்கி திருக்கோயில் கணக்கு இல : 224200180006053
SHARE

Author: verified_user