கோறளைப்பற்று தெற்கு பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் பணிப்பின் பேரில் முறக்கொட்டாஞ்சேனை மக்களின் வேண்டுகோளிற்கு அமையவும் இம்மக்களின் முக்கிய போக்குவரத்து பாதையாகக் காணப்பட்ட தேவாலய வீதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப வேலைகள் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆ.தேவராஜ், ஜனாதிபதி ஆலோசகரின் இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீன்; மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முறக்கொட்டாஞ்சேனை ஆலய முன்றலில் கிராம வாசிகளுடன் கலந்துரையாடினர்.
.jpg)
.jpg)
