08 October 2014

சித்தாண்டி மகா வித்தியாலய ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது

SHARE
(Dishanthan) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியராக கு.தவராசா அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான "ஆசிரியர் பிரதீபா பிரபா" என்னும் விருது இவ்வருடம் கிடைத்துள்ளது.



நேற்றைய தினம்() பாடசாலையின் ஒன்றுகூடல் வைபவத்தின்போது ஆசிரியர் கௌரவிக்கப்பட்டு பாடசாலை அதிபரினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

கல்வியமைச்சினால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டுவரும் இவ்விருது வழங்கும் நிகழ்வில் இவ்வருடம் பாடசாலையிலிருந்து விருது வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
விருது பெற்ற ஆசிரியர் கு.தவராசா அவர்களை எமது  இணையத்தளத்தின் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.  








SHARE

Author: verified_user