24 November 2014

வந்தாறுமூலையில் சத்யசாயி பாபாவின் 89 வது ஜனன தின விழா

SHARE
(Dilaxshan) பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 89 வது ஜனன தின விழவானது வந்தாறுமூலை ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையத்தில் தலைவர் த.சௌந்தரராஜா அவாகளின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   
அதிகாலை 5 மணிக்கு 21 தடவை ஓம்காரம்,சுப்ரபாதம்,நகரசங்கீர்த்தனம் என்பன இடம் பெற்றதுடன்  பிற்பகல் 2.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல், ஓம்காரம், பிரசாந்தி கொடியேற்றல், அஷ்டோத்திர பஜனைகள் மற்றும் நிலையத் தலைவர் த.சௌந்தரராஜா அவர்களால் தலைமையுரை என்பனவும் இடம் பெற்றன.

அதனை தொடர்ந்து பாலவிகாஸ் மாணவர்களால் சுலோகம் ஓதுதல்,பெற்றோர் மகிமை,பகவான் சாயுயும் அன்னை ஈஸ்வராம்பாவும்,சாயி தரிசன மகிமை மற்றும் குழுநடனம் என்பன இடம் பெற்றது அத்தோடு திருப்பொன்னூஞ்சல்,மகா மங்கள ஆரத்தியை அதை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.












SHARE

Author: verified_user