குடும்பிமலைப் பிரதேசத்திற்குச்செல்லும் பாதையில் அமைந்துள்ள கிரான் பாலத்தின் வீதியோடிணைந்த தாழ்வான பகுதியை மேவிச் செல்லக்கூடிய நிலையில் ஆற்றுநீர் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பின் தொடாச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன. முந்தணி ஆறு, மியான்கல் ஆகிய இரண்டு பிரதான ஆறுகளிலும் இருந்து வரும் நீர் இக்கிரான்பாலம் வழியாகவே ஓடி கடலை அடைவது குறிப்பிடத்தக்கது.