25 October 2012

மாவடிவேம்பு 02 இல் வாழ்வின் எழுச்சி நான்காம் கட்டம்

SHARE
மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) 4 ஆம் கட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் விதைகளை நடுதல் நிகழ்வு இன்று (25.10.2012) சுபவேளை காலை  10.11  மணியளவில் இடம்பெற்றது. 

கிரம சேவை உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜ், சமுர்த்தி உத்தியோகத்தர் இ.தவமணி, த.ம.வி.பு. கட்சியின் மாவடிவேம்பு அமைப்பாளர் சி.திருப்பதி மற்றும் மதகுரு கா.விஜயகுமார் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்வில் மாவடிவேம்பு 02  கிராமசேவகர் பிரிவு மக்களுக்கு பயிர்விதைகளை நடுவதற்குரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.








SHARE

Author: verified_user