11 March 2013

சந்தாணத்திற்கு போட்டியாக உருவாகும் பவர்ஸ்டார்

SHARE
விளம்பரங்களினாலேயே பிரபலமானவர் பவர்ஸ்டார் என்றால் அது மிகையில்லை. சமூக வலைத்தளங்களில் பல கணக்குகள், கலைநிகழ்ச்சிளில் தோன்றி கலக்குதல், அடிக்கடி சுவாரஸ்யமான பேட்டிகள் கொடுத்தல், தனது படத்தை தானே 1 வருடத்திற்கு வெற்றிகரமாக ஓட்டுதல் எனப் பல வினோதமான செயல்கள் மூலம் திரையுலகில் பேசப்பட்டுவரும் ஒருவர்தான் பவர்ஸ்டார் சீனிவாசன்.

 இவர் அண்மையில் நடித்து வெளிவந்த "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா" என்ற திரைப்படமானது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.


தற்போது நகைச்சுவை நடிகர் சந்தாணத்தையே ஓரம் கட்டுமளவிற்கு பவரின் வகிபாகம் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது "சும்மா நச்சுண்ணு இருக்கு" எனும் திரைப்படத்தில் பல்வேறு வேடங்களில் தனது ஆட்டத்திறைமையை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமன்றி அந்தப் பாடலின் முன்வரிகளை தன்னுடைய சொந்தக் குரலில் பாடியும் அசத்தியுள்ளார். பவர்ஸ்டாரின் நகைச்சுவையான ஆட்டத்தையும், அடுத்ததாக அவர் சொந்தக் குரலில் பாடிய பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்போது   இவரும் கமல்காசன் போன்று பிரகாசிப்பாரா? என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றும். திறமை இருக்கோ இல்லையோ ஆனால் துணிச்சலுடையவர், தன்னம்பிக்கையுடையவர் இந்தப் பவர்ஸ்டார்.

Powerstar Dance 



Powerstar Song
SHARE

Author: verified_user