வித்தியாலயத்தின் அதிபர் க.சுந்தலிரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.கிருஸ்னராசா அவர்களும், சிறப்பு அதிதியாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி ம.சுகுமார் அவர்களும், மற்றும் கல்வி வலய அதிகாரிகளும், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இல்ல மெய்வல்லுனர் நிகழ்வுகளில் முதலாவது இடத்தை விபுலானந்தா (சிவப்பு) இல்லமும், இரண்டாவது இடத்தை நல்லையா (பச்சை) இல்லமும், மூன்றாவது இடத்தை ராமகிருஸ்னா (மஞ்சள்) இல்லமும், நான்காவது இடத்தை விவேகானந்தா (நீலம்) இல்லமும் பெற்றுக்கொண்டன.
(படங்கள்:- பிரணவன்)
