25 April 2013

ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள்

SHARE
திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான  ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.
அதில் 'பாடசாலை மாணவர்களது சிகை அலங்கார விடயங்களில் அடிமைப்படுத்த வேண்டாம்;' என எழுதப்பட்டுள்ளதுடன்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்றும் உரிமைகோரப்பட்டுள்ளது.
ஆசிரியரின் வீட்டிற்கு முன்பாக நேற்று புதன்கிழமை இரவே மண்டையோடு வைக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை கதவைத் திறந்த ஆசிரியர் இதனைக் கண்டு அச்சமடைந்ததுடன் இது தொடர்பில் திருகோணமலை பொலிஸிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளதுடன்  இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



SHARE

Author: verified_user