நாட்டில் கடும்புயலினால் மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மாவட்டங்களில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
மின்னல் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொட்டக்கலை தேயிலை தொழிற்சாலையில் தொழில்புரிந்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆண் தொழிலாளர்கள் இருவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், ஆனமடுவ கன்னங்கர வித்தியாலயத்தில் மரத்திற்கு கீழிருந்த பாடசாலை மாணவன் ஒருவரும் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இன்று காலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இடிந்து சேதமடைந்துள்ளது.
மலையகத்தின் கட்டன் பகுதிகளிலும் கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள புகையிரத ஊழியர்களின் விடுதி மீது மண் மேடு சரிந்து வீழ்ந்தமையால் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வீட்டின் கூரை மற்றும் சுவர் பகுதி பாதிக்கப்பட்டுள்ளன. இதன்போது மக்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்பட வில்லை.
இதேவேளை ஹட்டனில் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக வீடுகளினுள் வெள்ளம் உட்சென்றுள்ளமையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களிற்கு முகங்கொடுத்துள்ளனர்.