கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை 45 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது மீள் திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக 80,000 விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உயர்தர மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

