25 June 2013

பட்டதாரிகள் ஒன்றியத்தின் கௌரவிப்புவிழா (#மேலதிக படங்கள்#)

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பட்டதாரிகள் ஒன்றியததின் கௌரவிப்பு விழா இன்று(25.06.2013)  வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

முன்னாள் பாடசாலை அதிபர் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

பட்டதாரிகள் ஒன்றித்தின் தலைவர் ம.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். 

மேலும் ஏறாவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.குணலிங்கம்,  பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிருவாகத்தினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.


சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து  அதிதிகள் மற்றும் சாதனையாளர்கள் அழைத்து வரப்பட்டு பாடசாலை நல்லையா மண்டபத்தினுள் ஏணைய நிகழ்வுகள் இடம்பெற்றன.


















SHARE

Author: verified_user