24 June 2013

வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள்

SHARE
கிழக்கின் திருப்பதியாகப் போற்றப்படும் வரலாற்றுச்சிறப்பு மிக்க  வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலய வருடாந்த உற்சவத்தில், ஸ்ரீ கிருஸ்ணரின் இளபராயத்து கிருஸ்ண லீலைகளைச் சித்தரிக்கும் வகையில் நடைபெறும் உறியடி உற்சவம் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.
 
பக்தி மயமான இந்த இதிகாச வரலாற்றுச் சித்தரிப்பினை காண பெருந்தொகையான பக்தர்கள் திருவிழா உற்சவ தினத்தில் திரள்வது வழமையானதாகும்.
 
கடந்த 22.06.2013 அன்று இரவு இறுதிநாள் திருவிழா உற்சவத்தில், சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வெளி வீதிஉலா வந்து உறியடி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
 
அதனையடுத்து நேற்றைய தினம் அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று, களுவன்கேணி சமூத்திரத்தில் திருவிழா தீர்த்தோற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்காள பக்தர்கள் கலந்து அருள் பெற்றனர்.
 
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழா கடந்த 11ஆம்திகதி செவ்வாய்க்கிழமை பகல்  கொடியேற்றத்துடன் அரம்பமானது.
 
ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதான உற்சவத்தில், 1008 சங்காபிசேகமும், உறியடி உற்சவம் 22ஆம்திகதி இரவு நடைபெற்றது. உற்சவத்தில் சிறப்பு திருவிழாக்களான அன்னாபிசேகம், முத்துப்பந்தலில் சுவாமி வலம் வரும் அனந்த சயனத்திருவிழா, கெருட வாகனத் திருவிழாவாக அமையும் திருவேட்டைத் திருவிழா, என்பனவும் நடைபெற்றன.
 
களுவன்கேணி சமுத்திரத்தில் நேற்றைய தினம் (23.06.2013)  காலை நடைபெற்ற தீர்த்தோற்சவத்தையடுத்து கிராமத்து மக்களுக்கு வீதிஉலாவந்து அருள் பாலித்தார். அடுத்து யாக கும்பம் சொரிதல், பொன்னூஞ்சல், திருவிளக்கு பூசை கொடியிறக்கமும் நடைபெற்றது.
 
உற்சவ கிரியைகளை ஆலய பிரதம யாழ் வட்டுக் கோட்டை குரு சிவஸ்ரீ சாட்சிநாதள் தெய்வந்திரக்குருக்களுடன் இணைந்து யாழ் வட்டுக் கோட்டை சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்களும்மேற்கொண்டனர்.









 
SHARE

Author: verified_user