25 June 2013

கோறளைப்பற்று தெற்கு எல்லையில் கலாசார மண்டபம்

SHARE
கோறளைப் பற்று தெற்கு எல்லையில் முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டில் 18 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட  றெஜி கலாசார மண்டபம் இன்று (24.06.2013) திறந்து வைக்கப்பட்டது.  

கோறளைப் பற்று தெற்கு பிரதேச சபைச் செயலாளர் சிகாப்தீன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கலாசார மண்டபத்தினைத் திறந்துவைத்தார்.
மேலும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே .தனபாலசுந்தரம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், கிரான் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.









SHARE

Author: verified_user