22 June 2013

இளையதளபதி விஜய்யின் பிறந்த தினம்

SHARE
இளையதளபதி விஜய்யின் 39 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இவர் 22 ஜுன் 1974 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் திரையுலகில் முன்னனி கதாநாயகனாக தற்போது விஜய் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.


விஜய் நடித்த படங்களின் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள்தான். அந்த வகையில் நாளை ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் ஆகும். அதனால் இன்று தனது தலைவா படத்தின் ஆடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு வழங்கப்போகிறார் விஜய்.


இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் திரையுலகைச்சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆகஸ்டில் திரைக்கு வரும் தலைவா படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.



SHARE

Author: verified_user