10 July 2013

முறக்கொட்டான்சேனையில் பாராட்டுவிழா

SHARE
முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் நட்சத்திரா மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் நுண்ணறிவு மற்றும் கலாசார பண்பாட்டை மேம்படுத்துதல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை எல்.ஓ.எம் சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் கோறளைப் பற்று கோட்டக் கல்வி அதிகாரி ந.குணலிங்கம், எல்.ஓ.எம் நிறுவன முகாமையாளர் எல்.ஆர்.டேவிட், திட்ட முகாமையாளர் வண ஏ.சௌந்தரராஜன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் ஆர்.பற்குணநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது பேச்சு, தமிழ் ஆங்கில கவிதை, நடனம் போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.




SHARE

Author: verified_user