இச் சாதனைக்கு சொந்தக்காரர்களான மாணவர்கள் மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்று (10.07.2013) வித்தியாலயத்தின் அதிபர் செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறப்பினரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்திற்கான விசேட ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் மண்முனை மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் பாஸ்கரன்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவி செயலாளர் ஜெ.ஜெயராஜ், உதவி கல்வி பணிப்பாளர் சிறிநேசன், செங்கலடி மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் மற்றும் கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
கேளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் நினைவு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
