13 July 2013

சித்தாண்டியில் தொழிட்பவியல் பிரிவு அறிமுகம்

SHARE
சித்தாண்டியில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பபட்ட தொழிநுட்பவியில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15.07.2013 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் புதிய கற்கை பிரிவினைக் கற்பதற்கு பல மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழிநுட்பவியல் பிரிவானது இலங்கையின் நாடுதழுவிய ரீதியில் முதற்கட்டமாக 200 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் பின்வரும் பாடங்களை மாணவாகள் எடுக்கமுடியும்.

1.தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்
2. பொறிமுறைத் தொழிநுட்பம் அல்லது  உயிர்வளத் தொழிநுட்பம்

அத்துடன் மூன்றாவது பாடத்தினை பின்வரும் 10 பாடங்களில் ஒன்றிலிருந்து தெரிவுசெய்துகொள்ளமுடியும்.

1.தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
2. தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
3. ஆங்கிலம்
4. புவியியல்
5. பொருளியில்
6. விவசாய விஞ்ஞானம்
7. கணக்கீடு
8. வணிகக் கல்வி
9. மனைப் பொருளியல்
10. சித்திரம்



SHARE

Author: verified_user