சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும், அதனால் ஏற்படும் நீர்ப்பற்றாக் குறை யும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!
உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரி யும்போது
உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தி ல் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறு நீரகக்கல் என்பது சிறு நீர கம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறு நீர்க்குழாய் எனச் சிறு நீரக மண்டலத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம்.
சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?
பல்வேறு காரணங்கள். சுற்றுச்சூழல், பழக்கவழக்கம், குடும்ப வர
லாறு என மூன்று வகையாகப் பிரிக்க லாம். உதாரணமாகச் சுற்றுச் சூழல் என் றால், நீங்கள் குடிக்கும் தண்ணீரில் குளோ ரைடு அதிகமாக இருந்தால், உங்களிடத் தில் சிறுநீரகக் கற்கள் உரு வாகலாம். பழக்கவழக்கம் என்றால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதை யோ, சிறுநீர் கழிக்காமல் இரு ப்பதையோ சொல்லலாம். குடும்ப வரலா று என்றால், மரபியல் தொடர்ச்சி.
சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?
ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ்வயிற்றில்
அதீதமான வயிற்றுவலி ஏற் படும். முதுகுப் பகுதியில், சிறு நீரக மண்டலத்தில் வலி அதிக மாக இருக்கும். சிறுநீர் கழிக் கும்போது எரிச்சல், ரத்தம் கல ந்து வருதல் ஆகிய பிரச்னை கள் இருக்கும். சிறு நீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட் ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை.
இதற்கு என்னதான் சிகிச்சை?
வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)
துளை மூலம் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Per cutaneous Nephro Lithotripsy)
எந்த அறுவைச் சிகிச்சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழியாக குழாய் போன்ற கருவியைச் செலுத்தி லேசர் கற்றைகள் மூலம் கற்களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்லிய டெலஸ்கோப் துணையுடன் சிறு நீரகத்தின் உள் அமைப்பைக் கணினியில் பார்த்து க்கொண்டே
செய்யப்படும் சிகிச்சை இது என்பதால், துல்லியமான சிகிச்சை உத்தரவாதம். நோயா ளிக்குத் துளி ரத்தச்சேதம்கூட இந்த முறையி ல் ஏற்படாது என்பது கூடுதல் நன்மை.
சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறை ந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும். கால்சியம் ஆக்ச லேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக் கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமான வரை தவிர்க் கலாம்.
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?
- Ganesh Parthipan

