14 July 2013

தனியார் கல்வி நிலையங்களுக்கான அறிவித்தல்.

SHARE
தனியார் கல்வி நிலையங்களாகச் கல்வி வழங்கி வரும் கல்வி நிலையங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கச்சேரி மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளினால் பல்வேறு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல கல்வி நிலையங்கள் இவற்றை தெளிவாக அறிந்துகொண்டு செயற்படவேண்மென குறிப்பிடப்படுகின்றது.


தனியார் கல்வி நிலையங்கள் பொதுவாக சிறுவர்களுக்கான கல்வியை வழங்கி வரும் கல்வி நிலையங்கள் இவற்றை முறையாக கடைப்பிடிக்கப்படவேண்டுமெனக் குறிப்பிடப்படுகின்றது. கல்வி நிலையத்தின் சூழலில் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் காணப்படவேண்டும். 

மேலும் ஞாயிறு தினங்களில் இடம்பெறும் அறநெறி வகுப்புகளைக் கருத்திற்கொண்டு அறநெறி வகுப்பில் பங்குகொள்ளும் தரம் 11 இற்குக் கீழப்பட்ட மாணவர்களுக்குரிய வகுப்புகளை ஞாயிறு தினங்களில் குறிப்பாக காலை 8.00 மணிதொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரையில் மேற்கொள்ளமுடியாது. ஞாயிறு தினங்களில் வகுப்புகளை நடாத்துவதென்றால் ஒன்றில் காலை 8.00 மணிக்கு முன்னர் முடிவடையும் வண்ணமோ அல்லது பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னரோ நடாத்தமுடியும்.


இதேவேளை அறநெறி வகுப்புக்கு செல்லாத உயர்தர மாணவர்களுக்கு ஞாயிறு தினங்களில் வகுப்புக்களை நடாத்தமுடியும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

சித்தாண்டி மாவடிவேம்பில் இயங்கி வரும் கல்வி நிலையங்களும் இது தொடர்பில் கவனம் எடுக்கும்படி கிராமஉத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
மேலதிக தகவல்கள் தேவையானவர்கள் கிராம உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும்.

கிராம உத்தியோகத்தர் (பூ.அருள்நாதன்) 0752357242  ,   0752256452



SHARE

Author: verified_user