கல்குடா வலயத்தின் க.பொ.த(சா/த) பெறுபேற்றினை அதிகரிப்பதற்கான செயற்திட்டம் ஒன்று வலயக்கல்விப் பணிப்பாளரின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் முதற் கட்டமாக முக்கிய ஐந்து பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இக் கலந்துரையாடல் ஒவ்வோரு பாடத்திற்கும் தனித்தனியே நடைபெற இருக்கின்றது. வருகின்ற 23.07.2013, 24.07.2013, 25.07.2014 ஆகிய தினங்களில் மேற்படி கலந்துரையாடல் பாடவாரியாக இடம்பெற இருக்கின்றது. இக்கலந்துரையாடலில் செயற்திட்டதின் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கப்படும்.
