கல்குடா வலயத்தின் இவ் வருடத்திற்கான கணினி திருத்த வேலைத்திட்டம் (Hardware and Network Solution Programme) கடந்த 19.07.2013 அன்று நடைபெற்றது. இதில் பல கணினிகள் திருத்தியமைக்கப்பட்டு இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இத் திருத்த வேலைகளில் எமது வலய Hardware and Network Solution Team (HNST) உறுப்பினர்களான திரு. எஸ். தயாகரன், திரு. எஸ். வரதராஜன், திரு எம். கிருஷானந்த், திரு. என்.உமாசங்கர், திரு. பி.விஜியபாஸ்க்கர், திரு அ.சத்தியசீலன், திரு என்.சண்முகநாதன், திரு த.குலேந்திரகுமார் என்போர் ஈடுபட்டனர். இவர்களுடன் மட்டக்களப்பு கல்வி வலய HNST உறுப்பினர் திரு ரவி ராஜேந்திரமும், பட்டிருப்பு கல்வி வலய உறுப்பினர் திரு. என்.நரேந்திரநாதனும் பங்குபற்றினர்.


