குடும்பிமலை - அக்கிறாணை பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயதான சின்னவன் பிரியா என்ற சிறுமியே இவ்வாறு காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காடுகள் சார்ந்த பிரதேசம் என்பதால் யானை உள்ளிட்ட மிருகங்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளமையினால் கட்டுத்துவக்கு போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
துவக்கு என்று தெரியாமல் பிள்ளை விளையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில்வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.