இச்சிரமதான நிகழ்வில் ஏறாவூர் மக்கள் சமூக சேவைகள் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர, பொலிஸ் உத்தியோகத்தர் மரியநேசன், கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் ரீ.கௌசல்யாதேவி, த.ம.வி.பு. கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜ் , இளந்தளிர் விளையாட்டுக் கழகத் தலைவரும், சிவில் குழு தலைவருமான சி.திருப்பதி மற்றும் சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை டெங்கு போன்ற நுளம்புகளின் தாக்கம் மற்றும் அவற்றைக் குறைப்பதற்கு சூழலை எவ்வாறு வைத்திருக்கவேண்டும் போன்ற விளக்கங்கள் பொலிஸ் உத்தியோகத்தர் மரியநேசன் அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
