கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லயைன், கல்வி நிலைய திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் , உயர்கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் மற்றும் தரம் 12, 13 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி ஆகிய உயர்கல்விகளைத் தொடருவதற்கு தெரிவான மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
