27 August 2013

சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் திருவருட்பாடல்கள் நூல் வெளியீட்டு விழா

SHARE
மட்டக்களப்பு சித்தாண்டி முச்சந்தியில் வருவபர்களுக்கெல்லாம் விக்கினங்களைத் தீர்த்து அருள்பாளித்துக்கொண்டு இருக்கும் முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் திருவருட்பாடல்கள் எனும் நூல் வெயியீட்டு விழா கடந்த 2013.08.18ம் திகதி ஆலய பரிபாலன சபையின் தலைவரின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஆலயத்தின் தலைவர் திரு.தவராசா, செயலாளர் திரு.சிவானந்தம் பொருளாளர் திரு.தியாகராசா மற்றும் ஆலயத்தின் நித்திய குருக்கள் உட்பட அதிகளவான பொதுமக்கள் நலன்விரும்பிகள் அடியார்கள் மத்தியில் நடைபெற்றது கூறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் அருள் நிறைந்த விநாயகப் பெருமானை பாமாலை பாடிப் புகழ்ந்து பரவசம் அடையவேண்டும் என்கின்ற நோக்கத்தில் தற்போதய ஆலய பரிபாலன சபையினர் சித்தாண்டி மண்ணின் மைந்தன் சோதிடர், கவிஞர் திரு.விநாயகம் சிகண்டிதாசன் அவர்களை பாடி விநாயகரை வாழ்த்த முன்வருமாறு வேண்டிக்கொண்தற்கு இனங்க உருவாகப்பெற்றதே இந்நூல். அடியார்களின் நலன் கருதி இந்நூலுடன் காவடிப்பாடல்கள், ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்ற அருட்பாடல்களும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் ஆலமரநிழலின் கீழிருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார் தற்போது மிகப்பெரிய அலங்கார தோற்றத்துடன் எம் சித்தாண்டி மண்ணுக்கு வருகின்றவர்களை வருக வருக என்று இன்முகத்துடன் அழகிய கோயில் கொண்டு அருள்பாலித்துக்கொண்டு இருக்கும் பிள்ளையார் அப்பனின் ஆலயகட்டிடம் மேலும் அபிவிருத்திகான படத்தில் காட்டப்பட்டுள்ள கணக்கு இலக்கத்துக்கு உங்கள் நன்கொடைகளை வழங்கி கட்டட வளர்ச்சிக்கு துணைபுரியுமாறு பரிபாலனசபையனர் தங்களை பணிவாக வேண்டிக்கொள்கின்றனர். 

(ந.நித்தியானந்தன் - சித்தாண்டி) 
 











 
SHARE

Author: verified_user