ஒரு சமூகத்தின் கலை கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பது என்பது அச்சமூகத்தைச் சார்ந்த அறிவுபடைத்த சமூகத்தின் கட்டாயப்பபணியாகும். அந்தவகையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசய செயலகத்தின் கலைகலாசார பிரிவின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (30.08.2013) மகிடிக்கூத்து முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலயத்தின் முன்றலில் இடம்பெற்றது.மகிடிக்கூத்தினை ஆர்வத்துடன் பார்வையிடுவதற்காக சித்தாண்டி, மாவடிவேம்பு, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கிரான், கோரகலிமடு,வந்தாறுமூலை முதலிய பிரதேசங்களிலிருந்து சிறுவர் முதல் பெரியோர்வரை வருகை தந்திருந்தனர். பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவின் உத்தியோகத்தர்கள் சிறப்பாக இதில் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததுடன், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிரான் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவானது இத்தகைய விதத்தில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளை கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டதும், கல்விஅறிவு பொருளாதாரம் என்பவற்றில் பின்தங்கிய பெருமளவிலான பகுதியைக் கொண்டுள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவானது கல்வியின் அவசியம், போதை ஒழிப்பு போன்ற பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(Photos by . Sajeevan)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
