29 August 2013

மாவடிவேம்பில் சிரமதானம்

SHARE
ஏறாவூர் பொலிசாரும், மாவடிவேம்பு 02 பொதுமக்களும் இணைந்து மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சிரமதானம் ஒன்றை இன்று (29.08.2013) அன்று மேற்கொண்டனர். 

இச்சிரமதானத்தில் ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர் கே.ஏ.எல்.வசந்த, எச்.எம்.டபிள்யு, கே.கேரத் ஆகியோரும், மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் தே.கொளசல்யாதேவி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.வரதராஜ், இளம்தளிர் விளையாட்டுக் களகத்தின் தலைவர் சி.திருப்பதி , பத்திரகாளி அம்மன் ஆலய தலைவர் ஆ.தேவராசா மற்றும் பொதுமக்கள் பங்குபற்றினர்.
சிரமதான நிகழ்வையடுத்து ஏறாவூர் பொலிசாரினால் டெங்கு தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 03.09.2013 அன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவிருக்கும் இரத்தான நிகழ்வில் பொதுமக்களைக் கலந்துகொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.






SHARE

Author: verified_user