கோரமல்லிமடு காளி நரசிங்க வைரவர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலானது, குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்த யானைப்பாகனான கோறளையன் என்ற ஒருவரது சமாதியில் அவரது ஆயுதங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சடங்கு நிகழ்வின்போது முன்னாள்முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களும் கலந்துசிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
