22 December 2013

தரம் 6 இல் புதிய மாணவர்களைச் சேர்க்கவிருக்கின்ற பெற்றோர்களுக்கான ஒன்றுகூடல்

SHARE
மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் தரம் 6 மாணவர்களைச் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கான ஒன்றுகூடல் ஒன்று பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நாளையதினம் (23.12.2013- திங்கட்கிழமை) காலை 9.00 மணயளவில் இடம்பெறவுள்ளதாக பாடசாலை அதிபர் திரு. தி.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார். 


எதிர்வரும் 2014 ஆண்டில் மாணவர்களை உள்ளீர்ப்பது தொடர்பாக இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதனால் பெற்றோர்கள் தவறாது சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வருகை தரும்போது எதுவித ஆவணங்களையும் (மாணவர் விடுகைச் சான்றிதழ், பிறப்பு பதிவு பத்திரம்) கொண்டுவரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user