உலக அழிவு நெருங்குகின்றதா? – ஓர் அலசல் (தொடர் 01)

நாம் வாழும் பூமியானது இவ்வருடத்தின் இறுதியில் அழிந்து விடும் என்ற அச்சமானது உலகில் வாழும் சிலரால் பரப்பரப்பாக பேசப்படுகின்ற விடயமாகும். இலங்கையில்  அண்மைக்காலமாக நிகழும் வழமைக்கு மாறான நிலைமைகள் கூட இந்த அச்சநிலைமையை இன்னும்  அதிகிரித்து வருகின்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக வழமைக்கு மாறாக பல விடயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றிற்கெல்லாம் அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஏன் இவ்வருடத்தில் மாத்திரம் இந்த நிலைமைகள் காணப்படுகின்றன? என்ற கேள்விகள் பலர் மத்தியில் எழுந்தவண்ணமே உள்ளன.

இந்தக்கட்டுரையானது இலங்கையில் இவ்வருடத்தில் வழமைக்கு மாறாக இடம்பெற்ற நிகழ்வுகள் என்ன? உலகம் அழிவடையும் என்பதற்காக கூறப்படுகின்ற ஆதாரங்கள் என்ன? உலக அழிவு ஒன்று நிகழுமாயின் அது எந்த விதத்தில் நிகழும் போன்ற விடயங்களை அறிவியல் ரீதியாக அலசி ஆராயவிருக்கின்றது.  உலக அழிவைப் பற்றி பல கட்டுரைகள் இதுவரையில் எழுதப்பட்டுள்ள போதிலும் இக்கட்டுரையானது இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளையும் மற்றும் ஏணைய விடயங்களை அறிவியில் ரீதியாகவும் ஆராய விருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகள்
இலங்கையில் இவ்வருடம் (2012) குறிப்பிடத்தக்களவிலான பல அதிசயங்கள் அல்லது அசாதாரணமான நிலைமைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில் பின்வரும் நிகழ்வுகள் அவற்றுள் முக்கியமானவையாகும்.
1.    இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற மீன்களின் கரையாதுங்கல் நிகழ்வு.
2.    மட்டக்களப்பில் இவ்வருடத்தில் இடம்பெற்ற 10 இற்கும் மேற்பட்ட பலமான காற்று மற்றும் மினிசூறாவளி நிகழ்வுகள்.
3.    கட்டன் மேபீல்ட் தோட்டத்தில் பெப்ரவரி மாதம் நிகழ்ந்த மஞ்சள் வடிவிலான மழைவீழ்ச்சி
4.    பதுளை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் நிகழ்ந்த பனிக்கட்டி மழை .

எனவே மேலே கூறப்பட்ட விடயங்கள் யாவற்றுக்கும் அறவியல் ரிதியாக விளக்கங்கள் வழக்கப்ட்ட போதிலும் , இவை இதற்கு முன்னைய வருடங்களில் நிகழ்தவற்றைக் காட்டிலும் வழமைக்கு மாறானவையாகும். இந்த நிலைமைகள் அனைத்திலும் அதிகமாக காலநிலை சார்ந்த மாற்றங்கள் தாக்கம் செலுத்தியுள்ளமை முக்கியமான விடயமாகும். இருந்தும் சிலபாமர மக்களுக்கு இவை அச்ச உணர்வை ஊட்டியிருக்கின்றமை அவதானிக்கப்படக்கூடிய விடயமாகும். எனவே முதலில் நாம் இங்கு மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்வகளுக்குமான அறிவியல் ரீதியான விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

(அடுத்த தொடரில் ... )

-  Akshayan -
Previous Post Next Post