14 June 2014

சித்தாண்டி குடும்பஸ்தர் கோராவளியில் சடலமாக மீட்பு

SHARE
கோராவளி கண்ணகி அம்மன் ஆலயப் பிரதேசத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில்  குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சித்தாண்டி வினாயகர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


குறிப்பிட்ட நபர் காட்டில் தேன்வெட்டச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சித்தாண்டி 01 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE

Author: verified_user