12 July 2014

பெருமாவெளி சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு - அறிவித்தல்

SHARE
சித்தாண்டி, பெருமாவெளி சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு உற்சவமானது எதிர்வரும் 14.07.2014 (திங்கட்கிழமை) அன்று ஆரம்பிக்கின்றது. எதிர்வரும் 14.07.2014 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பெருமாவெளி கட்டுப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டு திருக்கதவு திறத்தல் இடம்பெறுவதுடன், 16.07.2014  அன்று காலை 8.00 மணியளவில் திருக்குளிர்த்தி இடம்பெற்று நிறைவுபெறும். 


ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக வந்த ஆடு, மாடு, கோழிகள் யாவும் 16.07.2014 அன்று முற்பகல் 11.30 மணயளவில் ஏலத்தில் விடப்படும். அனைவரும் வந்து அன்னையின் அருள் பெற்றேகுமாறு  பெருமாவெளி பிள்ளையார், சிவமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர்  அன்புடன் அழைக்கின்றார்கள்.



SHARE

Author: verified_user