06 July 2014

சித்தாண்டி மகளிர் இல்லத்தில் தீ விபத்து

SHARE
(Sanjee)மட்டக்களப்பு-சித்தாண்டி  யோகசுவாமி மகளிர்  இல்லம் இன்று காலை தீடிரென தீப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் 6.45 மணியளவில்  தீவிபத்து  ஏற்பட்டுள்ளது.   விடுதியில் தங்கியிருந்த 33 பிள்ளைகள் மற்றும் அவர்களின் உடமைகளை  காப்பாற்றியுள்ளனர். விடுதியின் மேல்மாடி முற்றாக சேதமடைந்த நிலையில் முறக்கெட்டான்சேனை இராணுவம் மற்றும் பொதுமக்கள் என பலர் விடுதியில் இருக்கின்ற பொருட்களை வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.











SHARE

Author: verified_user